தொடர்ந்து 17-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு: இன்றைய விலை என்ன?
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த பரவ ஆரம்பித்ததில் இருந்து, அதாவது மார்ச் மாதத்தில் இருந்தே உலக நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் உலகம் முழுவதும் வாகனங்களில் பயன்பாடு குறைந்தது. இதனை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது
இதனை அடுத்து உலகின் பல நாடுகளில் பெட்ரோல் டீசல் விலைகள் அதிரடியாக குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் டீசலின் விலை குறையாமல் இருந்தது மட்டுமின்றி கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருவது நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது
இந்தியாவில் பெட்ரோல் விலை இன்று 17 நாளாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 83.04 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 76.77 ரூபாயாக உள்ளது. நேற்றைய பெட்ரோல் விலையை விடை இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 காசுகளும் டீசல் விலை லிட்டருக்கு 45 காசுகளும் உயர்ந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் அனைத்து பொருள்களின் விலை உயரும் அபாயம் இருப்பதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை அரசு கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென ஏற்கனவே எதிர்க் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வரும் நிலையில் அதனை கண்டுகொள்ளாமல் தினமும் பெட்ரோல் டீசல் விலை ஏறிக் கொண்டே இருப்பதை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது