1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 20 ஜூன் 2020 (08:12 IST)

என்னங்கடா இது... ஜெட் வேகத்தில் பெட்ரோல், டீசல் விலை..!

14 நாட்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வு. 
 
தமிழகத்தில் கோரோனா பாதிப்பினால் பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ள நிலையில் தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்தியுள்ளது. இதனால் பெட்ரோலுக்கான வரி 28லிருந்து 34 சதவீதமாகவும், டீசல் மீதான வரி 20லிருந்து 25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.  
 
மே 4 முதல் அமலுக்கு வந்த இந்த வரி உயர்வால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரத் தொடங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசுகள் அதிகரித்து ரூ.81.82க்கு விற்பனை. இதேபோல டீசல் விலை லிட்டருக்கு 54 காசுகள் அதிகரித்து ரூ.74.77க்கு விற்பனை ஆனது. 
 
இந்நிலையில் இன்று மீண்டும் 14 நாட்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை ரூ. 82.27க்கு விற்பனை, அதேபோல டீசல் விலை ரூ.75.29க்கு விற்பனை ஆகிறது.