செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 23 பிப்ரவரி 2023 (07:57 IST)

278 நாட்களாக மாறாத பெட்ரோல், டீசல் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

petrol
சென்னையில் கடந்த 278 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்ற நிலையில் இன்றும் உயரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் பெட்ரோல் விலை ரூபாய் 200, 300 என விற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் கடந்த 9 மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பது மக்களுக்கு மகிழ்ச்சியானதாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்த உள்ள நிலையில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என எதிர்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கும் நடவடிக்கை இப்போதைக்கு இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் இன்னும் ஒரு சில நாட்களில் பெட்ரோல் டீசல் விலை குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது 
 
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரு.102.63 என விற்பனையாகி வருகிறது. அதே போல் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24  என விற்பனையாக வருகிறது.
 
Edited by Siva