வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 22 பிப்ரவரி 2023 (08:15 IST)

276 நாட்களாக உயராத பெட்ரோல் விலை.. இன்று விலையில் மாற்றமா?

petrol
சென்னையில் கடந்த 276 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராத நிலையில் இன்று 277 வது நாளிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
 
சென்னை உள்பட இந்தியா முழுவதிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கிட்டத்தட்ட 9 மாதங்களாக உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சி அடைந்து வருவதால் அதன் பயனை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பதற்காக பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முன்வரவில்லை என்பது துரதிஷ்டமானதாக கருதப்படுகிறது. 
 
இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.64 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva