1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 15 மார்ச் 2022 (07:16 IST)

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருந்தது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்து இருக்கும் நிலையில் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருப்பது ஆச்சரியத்தை அளித்தது. 
 
ஐந்து மாநில தேர்தல் முடிவடைந்தவுடன் பெட்ரோல் டீசல் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெட்ரோல் விலை அதே நிலையில் இருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. 
 
இந்த நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு இல்லை என்றும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என்றும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது