வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 14 மார்ச் 2022 (16:48 IST)

ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்க இந்தியா யோசனை?

ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்க இந்தியா யோசனை என தகவல் வெளியாகியுள்ளது. 

 
தங்கள் நாட்டு கச்சா எண்ணெய்யை குறைந்த விலையில் விற்பதாக, ரஷ்யா கூறியதை இந்தியா ஏற்றுக்கொள்வது குறித்து யோசித்து வருகிறது என இரு இந்திய அதிகாரிகளை மேற்கோளிட்டு ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
 
யுக்ரேன் மீது ரஷ்யா தொடர் தாக்குதலை நடத்திவரும் நிலையில், சர்வதேச பணப்பரிவர்த்தனை சேவை அமைப்பான ஸ்விஃப்ட்டிலிருந்து சில ரஷ்ய வங்கிகளை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு தடைகளை மேற்கு நாடுகள் ரஷ்யா மீது விதித்துள்ளன.
 
இந்தியா தனது மொத்த எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. இதில், 2% முதல் 3% வரை ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்குகிறது.
 
ஆனால், எண்ணெய் விலை அதிகரித்துவருவதால், அதன் எரிசக்தி மீதான செலவைக் குறைக்கும் வழிகளை இந்திய அரசு ஆலோசித்துவந்ததாக, ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில், தள்ளுபடி விலையில் எண்ணெய் பொருட்களை வாங்குவது மகிழ்ச்சியானது எனவும் பொருளாதார தடைகளில் சிக்குவது குறித்து இந்தியா கவலைப்படவில்லை எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
மேலும், ரூபாய் (இந்திய பண மதிப்பு) – ரூபிள் (ரஷ்ய பண மதிப்பு) வர்த்தக வழிமுறைகளை உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.