செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 8 ஏப்ரல் 2020 (18:14 IST)

தமிழகத்தில் இன்று மட்டும் 48 கொரோனா பாசிட்டிவ்: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் இன்று மட்டும் 48 கொரோனா பாசிட்டிவ்
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் அறிவித்து வரும் நிலையில் சற்று முன் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை தெரிவித்துள்ளார் 
 
இதன்படி தமிழகத்தில் இன்று மட்டும் 48 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 48 பேர்களில் 42 பேர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர்கள் என்றும், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்களில்  679 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் 60739 பேர்களும், கொரோனா வார்டில் 230 பேர்களும் இருப்பதாக தெரிவித்த பீலா ராஜேஷ் இதுவரை தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6095 என்றும் தெரிவித்துள்ளார்.