1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 8 ஏப்ரல் 2020 (17:18 IST)

சூறைக்காற்றுடன் மழை... வானிலை ஆய்வு மையம் தகவல்!

அடுத்த 4 நாட்களில் தமிழகத்தின் 15 மாவடங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
நேற்று கோவை மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் மழை பெய்த நிலையில் இன்று 24 மணி நேரத்தில் தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  
 
மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, ஈரோடு, நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் அடுத்த 4 நாட்களில் தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தின் சில பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.