Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: தணிந்தது அக்னி நட்சத்திரம்

Written By siva
Updated: திங்கள், 16 மே 2022 (07:35 IST)
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அக்னி நட்சத்திர வெயில் தணிந்ததாக கருதப்படுகிறது
 
கடந்த சில நாட்களாக அசானி புயல் காரணமாகவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர் மற்றும் சேலம், ஈரோடு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
 சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

எல்லாம் காட்டு

குவிந்த திமுகவினர்!. திருச்சி நோக்கி யூடர்ன் போட்ட போலீஸ்!.. செம டிவிஸ்ட்!..

ரஜினிக்காக விட்டுக்கொடுத்த விஜய் ஆண்டனி!.. தர்மன் அப்டேட்!..

எப்படி நாகரீகமாக பேச வேண்டும் என்பதை ஸ்டாலினிடம் உதயநிதி கற்று கொள்ள வேண்டும்: தவெக

வைகோ புத்தக வெளியீட்டு விழாவில்ர் ராகுல் காந்தியுடன் தவெக அமைச்சர்... இந்தியா கூட்டணியில் இணைய வாய்ப்பா?

ஆணவம் அழிவுக்கு கொண்டுசெல்லும்!.. பாசிசத்துக்கு விழுந்த அடி!.. ஸ்டாலின் கமெண்ட்!..

அடுத்த கட்டுரையில்
Show comments