1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. south west monsoon starts from today

தொடங்கியது தென்மேற்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு மழை!

rain
பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்ற நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
 
அந்தவகையில் அந்தமானில் இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது .
 
இதன் காரணமாக அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள பகுதிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் இன்னும் ஒரு சில நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
திருட சென்ற இடத்தில் இளம்பெண்ணுக்கு வன்கொடுமை! – சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!