வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 13 மே 2019 (21:32 IST)

கமல்ஹாசன் பேச்சால் ஒரே நாளில் பிரபலமாகும் 'ஹேராம்' திரைப்படம்

நேற்று கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் இந்து தீவிரவாதம் குறித்து பேசியதோடு, பல வருடங்களுக்கு முன்னரே தனது 'ஹேராம்' படத்தில் இப்படியெல்லாம் நடந்து விடக்கூடாது என்று கூறியதாகவும், தான் பயந்தபடியே தற்போது நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.
 
கமல்ஹாசனின் இந்த பேச்சு பலரை யோசிக்க வைத்துள்ளது. ஏற்கனவே அவர் முன்கூட்டியே வருவதை சொல்வதில் ஒரு தீர்க்கதரிசி என்று கூறுவதுண்டு. சுனாமி என்றால் இந்தியர்கள் யாருக்குமே என்னவென்றே தெரியாதபோது சுனாமி குறித்து தனது 'அன்பே சிவம்' படத்தில் கூறியவர். அதேபோல் விஸ்வரூபம் படத்தில் பறவைகள் வெடிகுண்டுகள் குறித்தும் முன்கூட்டியே கணித்து கூறியவர்
 
அந்த வகையில் 'ஹேராம்' படத்தில் அவர் பல நுணுக்கமான விஷயங்களை கூறியிருந்தாலும், அந்த படம் மக்களை சென்று ரீச் ஆகாததால், அவர் அந்த படத்தில் என்ன கூறினார் என்று பெரும்பாலானோர்களை சென்று சேரவில்லை. இந்த நிலையில் நேற்றைய சர்ச்சைக்கு பின்னர் இன்று பலர் 'ஹேராம்' டிவிடி வாங்கி சென்றதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இன்று ஒரே நாளில் ஆயிரக்கணக்கான ஹேராம் டிவிடி விற்பனையாகியுள்ளது.  அதேபோல் யூடியூபிலும் பலர் ஹேராம் படத்தை தேடிக்கண்டுபிடித்து பார்த்து வருகின்றார்களாம்