இன்று மாலை ரஜினியை சந்திக்கும் கமல்: ஆதரவு கிடைக்குமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதில்லை என சமீபத்தில் அறிக்கை ஒன்றின் மூலம் தனது முடிவை தெரிவித்து விட்டார். இதனை அடுத்து அவரது ரசிகர்கள் கவலை அடைந்தாலும் ரஜினியின் உடல்நிலையை கணக்கில் கொண்டு தற்போது ஆறுதல் அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரஜினியின் அரசியல் வரவை எதிர்பார்த்து காத்திருந்த அரசியல் கட்சி தலைவர்கள் தற்போது ரஜினியின் ஆதரவு யாருக்காக இருக்கும்? அவர் யாருக்காக குரல் கொடுப்பார்? என்று யோசிக்கத் தொடங்கி விட்டனர்
இந்த நிலையில் ரஜினியின் ஆதரவை கேட்பேன் என பகிரங்கமாக அறிவித்த கமல்ஹாசன் இன்று ரஜினியை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்றுடன் மூன்றாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டு சென்னை திரும்பும் கமல்ஹாசன், ரஜினியை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த சந்திப்பின்போது அவர் ரஜினியிடம் உடல்நலம் குறித்து விசாரித்து விட்டு தனது கட்சிக்கு ஆதரவு கேட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் கட்சிக்கு ரஜினி ஆதரவு கொடுப்பாரா? வரும் தேர்தலில் கமல் ரஜினி இருவரும் இணைந்து ஒரு மாறுதலை ஏற்படுத்துவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்