குஷ்பூ சென்ற கார் கண்டெய்னர் லாரியில் மோதி விபத்து! – மதுராந்தகம் அருகே அதிர்ச்சி சம்பவம்!
சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பூ சென்ற கார் கண்டெய்னர் லாரியில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக காங்கிரஸின் செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பூ சமீபத்தில் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அது தொடர்ந்து திருமாவின் மனு சர்ச்சை, பாஜக வேல் யாத்திரை உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் தீவிரமாக குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் இன்று வேல் யாத்திரைக்காக மதுராந்தகம் அருகே சென்றுக் கொண்டிருந்த குஷ்பூவின் கார் முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் காரின் முன்பக்கம் நொறுங்கிய நிலையில் நடிகை குஷ்பூ லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.