1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 16 ஏப்ரல் 2020 (20:38 IST)

தமிழகத்தில் மாவட்டவாரியாக இன்றைய கொரோனா நிலைமை:

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1267ஆக உயர்ந்துள்ளது
 
இந்த நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 25 பேர்களில் நாமக்கல்லில் 5 பேர்களும், சென்னை, ராமநாதபுரம் மற்றும் மதுரையில் தலா 3 பேர்களும், சேலம் மாவட்டத்தில் 2 பேர்களும், கோவை, திருப்பூர், நெல்லை, திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சை, ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இதனையடுத்து தமிழகத்தில் சென்னையில் 217 பேர்களும், கோவையில் 127 பேர்களும், திருப்பூரில் 80 பேர்களும், ஈரோட்டில் 70 பேர்களும், திண்டுக்கல்லில் 65 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது