திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 16 ஏப்ரல் 2020 (18:59 IST)

கொரோனாவை விரட்ட சிக்கன் கறி விருந்து வைத்த இளைஞர்: பெரும் பரபரப்பு

கொரோனாவை விரட்ட சிக்கன் கறி விருந்து வைத்த இளைஞர்
கொரோனா வைரசிடம் இருந்து மனித இனத்தை காப்பாற்றா உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் இரவு பகலாக பாடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஒரே ஒரு கறி விருந்தில் கொரோனாவை தமிழகத்தில் இருந்து விரட்டி விடலாம் என்று இளைஞர் ஒருவர் முயற்சித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
 
கும்பகோணம் அருகே தியாக சமுத்திரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த சிவகுரு என்ற இளைஞர் அந்த பகுதியில் உள்ள இளைஞர்களை அழைத்து வயல்வெளி ஒன்றில் இலைகளை போட்டு சிக்கன் குழம்புடன் கூடிய விருந்து வைத்துள்ளார். கொரோனா விருந்து என்ற பெயரில் இந்த விருந்தை நடத்தினால் கொரோனா தமிழகத்தை விட்டு ஓடிவிடும் என்று அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த விருந்து கொடுத்த வீடியோ நேரடியாக பேஸ்புக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒளிபரப்பானது. இதனை அடுத்து போலீசார் சுதாரித்து உடனடியாக அந்த விருந்து வைத்த சிவகுரு என்பவரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் விருந்தில் சாப்பிட்ட இளைஞர்கள் தப்பி ஓடி விட்டதாகவும் அவர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது