டெல்லியில் இறந்த திருப்பூர் மாணவரின் உடல் இன்று பிரேத பரிசோதனை
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த தமிழகத்தின் திருப்பூரை சேர்ந்த சரத்பிரபு என்ற மாணவர் நேற்று அக்கல்லூரி வளாகத்தில் உள்ள கழிவறையில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்
சரத்பிரபுவின் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதனால் அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பு அதிகம் என்ற வகையில் டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் சரத்பிரபுவின் பெற்றோர் இதனை ஒப்புக்கொள்ளவில்லை. மரணம் அடைவதற்கு முந்தைய நாள் கூட தங்களிடம் அவர் சந்தோஷமாக பேசியதாகவும், எனவே சரத்பிரபு தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை என்றும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவர் சரத்பிரபுவின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. சரத்பிரபுவின் பிரேத பரிசோதனையை ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மேற்கொள்ள, டெல்லி காவல்துறை சார்பில், மாநில அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.