தமிழகத்தில் இன்று 22வது தடுப்பூசி சிறப்பு முகாம்: 2வது தவணைக்கு முக்கியத்துவம்!
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வந்ததை அடுத்து பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்காக தடுப்பூசி சிறப்பு முகாம் தமிழக அரசால் அமைக்கப்பட்டது
கடந்த இரு வாரங்களாக இந்த தடுப்பூசி சிறப்பு முகாம்களில் ஏராளமானோர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர் என்பதும் இதன் காரணமாக தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று இரண்டாவது கொரோனா வைரஸ் தடுப்பூசி சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் இரண்டாவது தவணை செலுத்துபவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தாத அனைவரும் தவறாமல் இந்த சிறப்பு முகாம்களில் பங்கு கொண்டு தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது .