திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (08:51 IST)

இந்தியா முழுவதும் 3வது டோஸ் தடுப்பூசி: மத்திய அரசு தகவல்

இந்தியா முழுவதும் 3-வது டோஸ் தடுப்பூசி செலுத்த வாய்ப்பு இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் அது குறித்த விஞ்ஞானபூர்வ தேவையை ஆய்வு செய்து வருவதாகவும் மத்திய அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 
இந்தியாவில் நூறு கோடிக்கும் மேல் கொரோனா வைரஸ் முதல் மற்றும் இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் ஒரு சிலருக்கு மட்டும் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் இந்தியா முழுவதும் 3-வது டோஸ் செலுத்தப்படுவது குறித்து விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் இந்த ஆய்வின் முடிவில் தேவைப்பட்டால் அனைவருக்கும் மூன்றாவது டோஸ் செலுத்தப்படும் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது 
 
இது குறித்த முடிவு இன்னும் ஒரு சில மாதங்களில் எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது