செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 10 மே 2024 (19:19 IST)

தமிழ்நாட்டில் இன்று எத்தனை மாவட்டங்களில் சதம்? வெப்பநிலை குறித்த தகவல்..!

Summer
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் குறிப்பாக அக்னி நட்சத்திரம் ஆரம்பித்ததில் இருந்து வெப்பநிலை அதிகமாக பதிவாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில பகுதிகளில் கோடை மழை பெய்தாலும் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை தான் நிலவி வருகிறது என்றும் மதிய நேரத்தில் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் முடியாத அளவுக்கு வெப்பநிலை பதிவாகி வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் 10 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெப்பம் பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த 10 மாவட்டங்கள் இதோ:
 
ஈரோடு - 104°F
வேலூர் - 104°F
மதுரை விமான நிலையம் - 104°F
திருச்சி - 104°F
திருத்தணி - 102°F
கரூ‌ர் பரமத்தி - 102°F
தஞ்சாவூர் - 102°F
நாமக்கல் - 101°F
சேலம் - 101°F
திருப்பத்தூர் - 100°F
 
Edited by Siva