திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 16 நவம்பர் 2022 (09:31 IST)

பயணிகளிடம் ஒழுங்கீனமாக நடந்து கொள்ள வேண்டாம்! – போக்குவரத்து கழகம் எச்சரிக்கை!

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் பேருந்தில் பயணிக்கும் பயணிகளிடம் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் என ஓட்டுனர், நடத்துனர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான உள்ளூர், நகர, மாநகர பேருந்துகள் தமிழ்நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. இந்த பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் வழிகாட்டு நெறிமுறைகளை அவ்வபோது வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் போக்குவரத்து கழகம் “பயணிகளிடம் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் அலட்சியமாக நடந்து கொள்வதையும், பேசுவதையும் தவிர்க்க வேண்டும். பணியில் இருக்கும்போது வீண் வார்த்தைகள், தவறான பேச்சுகள், கைகலப்பு போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.


சென்னை மாநகர பேருந்துகள் இயங்க வேண்டிய வழித்தடத்தில் இருந்து மாறி வேறு சாலைகளில் பேருந்துகளை இயக்கக் கூடாது. பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களின் ஒழுங்கற்ற செயல்களால் போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், அவப்பெயரும் உண்டாகியுள்ளது.

பயணிகளை உரிய நிறுத்தத்தில் சரியாக இறக்கி விட வேண்டும். நிறுத்தத்திற்கு முன்பே கட்டாயமாக இறக்கி விட கூடாது” என கூறப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K