1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4: வதந்தியை நம்ப வேண்டாம் என அறிவிப்பு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-IV குறித்த தவறான அறிவிக்கை சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும், அதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் என தெரிவித்தும் TNPSC அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 
 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4 குறித்த தவறான அறிவிக்கை சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
 
இதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் என தேர்வாணையம் தெரிகிறது 
 
தேர்வாணையத்தின் அனைத்து அறிக்கைகளும் தேர்வாணைய இணையதளமான https://www.tnpsc.gov.in/ என்ற  இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். 
 
தொகுதி 4க்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது. அதனை https://www.tnpsc.gov.in/ என்ற தேர்வாணைய இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளுமாறு இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.