1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 16 நவம்பர் 2020 (12:32 IST)

#TNgovtDismiss_Surappa - சமூக வலைத்தளத்தில் டிரெண்ட்!!

சமூக வலைத்தளமான ட்விட்டரில் #TNgovtDismiss_Surappa என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. 
 
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தனது மகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை கொடுத்ததாக திடீரென எழுந்த குற்றச்சாட்டு காரணமாக அவர் மீதான குற்றச்சாட்டை விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குழுவினர் தற்போது விசாரணையை தொடங்கி உள்ளனர். 
 
இந்நிலையில் விசாரணை வளையத்தில் இருக்கும் சுரப்பாவை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்பட பல அரசியல்வாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பவை சஸ்பெண்ட் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளமான ட்விட்டரில் #TNgovtDismiss_Surappa என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது.