1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 30 மே 2022 (12:07 IST)

பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம் - வாகன ஓட்டிகளுக்கு சிரமமா?

மே 31 ஆம் தேதி எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து எரிபொருள் கொள்முதல் செய்வதில்லை என தமிழக எரிபொருள் விற்பனை நிலையங்கள் அறிவிப்பு. 

 
ஆம், மத்திய அரசின் திடீர் விலை குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 31 ஆம் தேதி எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து எரிபொருள் கொள்முதல் செய்வதில்லை என தமிழக எரிபொருள் விற்பனை நிலையங்கள் முடிவு செய்துள்ளன. படிப்படியாக விலையை குறைக்க வேண்டும் என டீலர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், திடீரென விலை குறைக்கப்பட்டதால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 
 
இது குறித்து தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு எரிபொருள் விலையை குறைத்ததால் டீலர்களுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளியின் போது எரிபொருள் விலை குறைக்கப்பட்டது, ஆனால் அந்த நாட்களில் டீலர்கள் ஐந்து நாட்களுக்கு பெட்ரோல் மற்றும் 4 நாட்களுக்கு டீசல் இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டது.
மேலும், 2017 ஆம் ஆண்டு முதல் டீலர் மார்ஜின் திருத்தப்படவில்லை என்றும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.60 ஆக இருந்த போது தற்போதுள்ள மார்ஜின் தான் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய்க்கு மேல் இருப்பதால், டீலர்கள் அதிக பணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 
 
எனவே தங்களின் துயரத்தை வெளிப்படுத்தும் வகையில் மே 31 ஆம் தேதி எரிபொருள் வாங்காமல் போராட்டம் நடத்த உள்ளோம். ஒரு நாள் போராட்டம் நடத்தினால் எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் தங்களது மாதாந்திர இலக்கை எட்ட முடியாமல் தடுக்கும் என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.