1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified வியாழன், 17 பிப்ரவரி 2022 (12:45 IST)

3 ஆம் பாலினத்தவர்களுக்காக சட்ட திருத்தம்!

விசாரணை என்ற பெயரில் 3 ஆம் பாலினத்தவர்களை தேவையின்றி போலீசார் தொந்தரவு செய்வதை தடுக்க தமிழக காவல்துறையில் புதிய விதி. 

 
3 ஆம் பாலினத்தவர்களுக்காக தமிழக காவல்துறையில் புதிய நடத்தை விதி சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது, விசாரணை என்ற பெயரில் 3 ஆம் பாலினத்தவர்களை தேவையின்றி போலீசார் தொந்தரவு செய்வதை தடுக்க நடத்தை விதி 24 சி என்ற பிரிவு சேர்க்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. 
 
இதன் மூலம் நடத்தை விதி சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே திருநங்கைகளை காவல்துறை விசாரணை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 3 ஆம் பாலினத்தவர்களை தவிர்த்து தன்பாலின ஈர்ப்பாளர்களையும் தேவையின்றி தொந்தரவு செய்யக்கூடாது என சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.