திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 6 ஜனவரி 2022 (13:49 IST)

பல்கலை துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும்: விரைவில் சட்டத்திருத்தம்!

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் சட்டத்திருத்தம் விரைவில் சட்டமன்றத்தில் கொண்டு வரப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தற்போது மாநில ஆளுநரால் நியமனம் செய்யும் முறை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை மாற்றி பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசு நியமனம் செய்யும் முறை கொண்டு வர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வருகின்றன. 
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று சட்டமன்றத்தில் பேசிய போது வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநில அரசு நியமனம் செய்வது குறித்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்று கூறியுள்ளார்.