ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சனி, 27 ஜூலை 2024 (08:55 IST)

வருகின்ற தேர்தலில் செந்தில் பாலாஜி இருந்தால் பலமாக தான் இருக்கும்- அமைச்சர் முத்துசாமி!

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழு சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறுதானிய உணவகத்தை திறந்து வைத்தார்.
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  அமைச்சர் முத்துசாமி.......
 
எளிய மக்கள் காலதாமதமாகல் வீடு கட்டுவதற்க்காக உடனடி அப்ரூவல் கிடைப்பதற்காக திட்டத்தை முதல்வர் துவக்கியுள்ளார்.
இதில் சதுர அடிக்கு இரு மடங்கு கூடுதல்  கட்டணம் வசூலிப்பதாக அதிமுகவினர் கூறுவது தவறு.
 
முன்பு போல அப்ரூவல் வாங்கும் நடைமுறை இருந்தால் மக்களுக்கு  எவ்வளவு அலைச்சல் ,எவ்வளவு செலவு ஆகியிருக்கும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். அதிக கட்டணம் இருந்தால் முதல்வர் ஆய்வு செய்வார்.ஆனால் அப்படி எதுமில்லை மேலும் வருகின்ற தேர்தலில் செந்தில் பாலாஜி இருந்தால் பலமாக தான் இருக்கும்.
 
அவர் இப்போது சிறையில் இருப்பது எங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் வருத்தம். 
 
மூத்த அமைச்சர் ஒருவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்ற பிரேமலதாவின் கருத்து குறித்த கேள்விக்கு:
 
இது எங்கள் கட்சி யாருக்கும் துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் தான் முடிவு செய்வோம் என பதிலளித்தார்.