1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (21:50 IST)

தமிழகத்திலும் குறைக்கப்படுகிறது பெட்ரோல் மீதான வரி: விரைவில் அறிவிப்பு

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் பெட்ரோல் விலையை குறைக்கும் நடவடிக்கையாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பெட்ரோல் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் 
 
இந்த வேண்டுகோளை ஏற்று ஏற்கனவே நான்கு மாநிலங்கள் பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்து உள்ளன என்பதும் அந்த மாநிலங்களில் பெட்ரோலின் விலை குறைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழகத்திலும் பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைப்பதற்கான ஆலோசனை நடந்து வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
தமிழகத்தில் தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதை அடுத்து வாக்காளர்களை கவர்வதற்காக இந்த அறிவிப்பு இருக்கும் என்றாலும் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வாட் வரியை குறைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது