ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 4 செப்டம்பர் 2017 (15:24 IST)

நவம்பர் 17க்குள் உள்ளாட்சி தேர்தல்; உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் நவம்பர் மாதம் 17ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

 
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவடைந்து 11 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள் முடங்கியுள்ளதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிக்கை அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த் அறிக்கையை அடுத்து உயர் நீதிமன்றம் இன்று தீப்பளித்தது. 
 
அதாவது, செப்டம்பர் 18ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும், நவம்பர் 17ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.