எனக்கு வேற வழி தெரியல.. தெருவில் வட்டம் வரைந்த முதல்வர்! – கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்!

Madhya Pradesh
Prasanth Karthick| Last Modified புதன், 24 மார்ச் 2021 (08:29 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய பிரதேச மாநில முதல்வர் மேற்கொண்டுள்ள விழிப்புணர்வு பிரச்சாரம் வைரலாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் கோடியை தாண்டியுள்ள நிலையில் தற்போது மீண்டும் பாதிப்புகள் வேகமெடுத்து வருகின்றன. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் சாலைகளில் வட்டம் வரைந்து சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். மேலும் மக்கள் மாஸ் அணிவது அவசியம் என்றும், மாஸ்க் வாங்க இயலாதவர்களுக்கு இலவச மாஸ்க் வழங்க அரசு ஏற்பாடு செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :