சனி, 28 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 24 நவம்பர் 2021 (11:45 IST)

தக்காளி விலையை குறைக்க தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!

தக்காளி விலை நாளுக்குநாள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே வரும் நிலையில் 79 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
 
கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து குறைவு காரணமாக 150 ரூபாய்க்கும் மேலாக ஒரு கிலோ தக்காளி மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தக்காளி விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 160க்கும் மேல் வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் சென்னையில் பண்ணைப் பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 79க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
 
இதேபோல் வெளி மார்க்கெட்டிலும் விரைவில் தக்காளி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.