புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 23 மார்ச் 2020 (12:14 IST)

4 ஆயிரம் மருத்துவர்கள் கொண்ட அவசர படை – தயாராகும் தமிழகம்!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 ஆயிரம் மருத்துவ பணியாளர்கள் கொண்ட அவசர படையை சுகாதாரத் துறை உருவாக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா வைரஸை பொருத்தவரையில் அது சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கும் பரவும் சாத்திய கூறுகள் அதிகமுள்ளது.

கேரளாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனைத்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும் கொரோனா பரவியதால் மருத்துவமனையை இழுத்து மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்ட தமிழக அரசு 4 ஆயிரம் மருத்துவ பணியாளர்களை வீட்டில் சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டு இருக்க அறிவுறுத்தியுள்ளது. பணியில் உள்ள மருத்துவர்களுக்கு தொற்று ஏற்படும் நிலையில் அவசர படை மருத்துவர்கள் மக்களுக்கு சிகிச்சையை அளிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

தடையில்லாமல் மக்களுக்கு சிகிச்சை தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அவசர படை ஏற்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.