திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Modified: திங்கள், 23 மார்ச் 2020 (11:41 IST)

இணையத்தை கலக்கும் நயன் - விக்கி ஜோடியின் டிக்-டாக் வீடியோ!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளோம். இதனால் அவரவர் தங்களது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்து வருகின்றனர். நடிகர், நடிகைகளுக்கும் ஷூட்டிங் இல்லாததால் எங்கும் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருந்து வருகின்றனர்.

அந்தவகையில் தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் காதல், ரொமான்ஸ் என ஜாலியாக இருந்து வருகின்றனர். அதன் வெளிப்பாடாக இருவரும் செய்த செய்த டிக்டாக் வீடியோ ஒன்றை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது. கொரானா தாக்கம் இங்கு காதல் மயக்கமாக இருக்கிறது. அந்த கரடிக்கு (விக்னேஷ் சிவன் ) என்ன ஒரு ஆனந்தம் என நெட்டிசன்ஸ் கிண்டல் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ....