ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 17 டிசம்பர் 2023 (12:42 IST)

உலக வங்கியின் உதவியுடன் 2,300 ஏரிகள் மீட்டெடுக்கப்படும்: தமிழக அரசு தகவல்

Sembarambakkam Lake
உலக வங்கி உதவியுடன் தமிழகத்தில் உள்ள 2200 ஏரிகள் மீட்டெடுக்கப்படும் என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

சென்னை சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மழை நீர் வீணாக கடலில் கடப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஏரி கால்வாய்களை தூர்வார வேண்டும் என்றும் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாப்பது தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மண்டல, மாவட்ட, மாநில அளவில் குழுக்களை அமைத்து, கடந்த 2022 பிப்ரவரியில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாத நிலவரப்படி 20,150 நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, 7,569 ஏரிகள் ஆக்கிரமிப்பு இல்லாமல் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், கேரளா, ஆந்திராவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள நீர் பங்கீட்டு ஒப்பந்தங்கள் மீறப்படும்போது தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நீர்நிலைகள் மராமத்து மற்றும் புதுப்பிப்பு, சீரமைப்பு திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் 2,300 ஏரிகள், உலக வங்கி நிதியுதவியுடன் ஆழப்படுத்தப்பட்டு, அவற்றை பழைய நிலைக்கு மீட்டெடுக்கப்பட உள்ளன என தெரிவித்துள்ளது.

Edited by Siva