திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 16 நவம்பர் 2022 (13:36 IST)

இறந்த ப்ரியாவின் குடும்பத்திற்கு புதிய வீடு: தமிழ்நாடு அரசு நடவடிக்கை

priyaa
தவறான சிகிச்சையால் பலியான சென்னையை சேர்ந்த கால்பந்து வீராங்கனை ப்ரியாவின் குடும்பத்திற்கு தமிழக அரசு வீடு ஒதுக்க நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
சென்னையை சேர்ந்த 17 வயது கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா தவறான சிகிச்சை காரணமாக நேற்று மரணமடைந்தார். அவரது மரணம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு மற்றும் பிரியாவின் சகோதரர்களில் ஒருவருக்கு அரசு வேலை என அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் தற்போது பிரியாவின் குடும்பத்தினர் வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில் அவர்களுக்கு வீடு ஒதுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 தமிழ்நாடு அரசின் நகர்புற மேம்பாட்டு வாரியம் சார்பில் ப்ரியாவின் குடும்பத்திற்கு வீடு ஒதுக்குவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் விரைவில் அந்த குடும்பத்திற்கு புதிய வீடு ஒன்று தரப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran