1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 31 மார்ச் 2020 (17:36 IST)

தனியார் பள்ளிகள் கட்டணம் வாங்க கூடாது: அதிரடி உத்தரவு

தனியார் பள்ளிகள் கட்டணம் வாங்க கூடாது
கொரோன வைரஸ் பாதிப்பு காரணமாக வீட்டின் உரிமையாளர்கள் ஒரு மாத வாடகையை வாங்க கூடாது என தமிழக அரசு சற்றுமுன் உத்தரவிட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
இதன்படி தனியார் பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை கூடாது என்று தனியார் பள்ளிகள் இயக்குனர் எச்சரிக்கை விடுத்ததோடு, வரும் ஜூன் மாதம் வாங்க வேண்டிய கட்டணத்தை பள்ளிகள் தற்போது வாங்க கூடாது என்றும் மீறினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
அதேபோல் கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள் மாதத் தவணையை செலுத்த 3 மாதம் அவகாசம் அளிக்கப்படும் என்றும் சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த 3 மாதம் அவகாசம் அளிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள் மாதத் தவணையை செலுத்த 3 மாதம் அவகாசம் அளித்தும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது