வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (19:28 IST)

ஜெயலலிதா சிலை பராமரிப்பு: துறையை மாற்றி தமிழக அரசு அரசாணை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலையை பராமரிக்கும் துறையை மாற்றி தமிழக அரசு சற்றுமுன் அரசாணை வெளியிட்டுள்ளது. 
 
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலையை சென்னை உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ளது என்பது தெரிந்ததே. 
 
இந்த சிலையை பராமரிக்கும் பொறுப்பு உயர் கல்வித் துறையிலிருந்து செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநருக்கு மாற்றி தமிழக அரசு சட்டம் அரசாணை வெளியிட்டுள்ளது. 
 
ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அவரது சிலைக்கு பிற தலைவர்களின் சிலையை போன்று அரசு மரியாதை செலுத்தப்படும் என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது