வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 20 நவம்பர் 2020 (13:41 IST)

மருத்துவ கல்லூரியில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்குமா?

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு செய்யப்பட்டதை அடுத்து இந்த ஆண்டு அரசு பள்ளியில் படித்த 405 மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
 
இந்த நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான, மருத்துவ கல்வி கட்டணத்தை, அரசே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
 
இந்த ஆண்டு 7.5%  இட ஒதுக்கீடு காரணமாக 405 மாணவர்களுக்கு தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ள நிலையில், மாணவர்கள் கட்டணத்தை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், எனவே, கைக்கு எட்டிய மருத்துவக் கல்வி வாய்க்கு எட்டாதோ என்ற ஏக்கம், மாணவர்களிடையே ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் மருத்துவப் படிப்புகளில் சேர தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 405 மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 
 
பாமகவின் இந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்