திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (12:19 IST)

ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு அனுமதி மறுப்பு - தமிழக அரசு அதிரடி

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லை நிறுவனம், தனது உரிமத்தை புதுப்பிக்க கொடுத்த மனுவை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்துள்ளது.

 
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையில் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்பட பலவித நோய்கள் ஏற்படுவதாக கூறி அந்த ஆலையை மூடும்படி அப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.  
 
அடுத்த ஆண்டுடன் ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்தம் முடிவடையவுள்ள நிலையில் மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தை நீடித்தது. மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணியை மேற்கொண்டு வந்தன.  
 
இதனால் கடும் கொந்தளிப்பில் இருந்த பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை மூட வலியுறுத்தியும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், மாணவ அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இன்று 58வது நாளாக இந்த போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், இந்த ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கான அனுமதி கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, கூடுதல் தகவல் கேட்டு அந்த ஆலையின் விண்ணப்பத்தை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்துள்ளது. இன்னும் 15 நாட்களில் கூடுதல் தகவலோடு, ஸ்டெர்லைட் நிர்வாகம் மீண்டும் மனு தாக்கல் செய்யும் எனத் தெரிகிறது. 
 
இதன் காரணாக, பராமரிப்பு பனிகள் மேலும், 15 நாட்களுக்கு தொடரும் என ஸ்டெர்லைட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.