ஸ்டெர்லைட் ஆலையை மூட முடியாது; அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
தூத்துக்குடி ஸ்டெலைட் ஆலையால் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த பின்னரே சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று வலியுறுத்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 4 நாட்களாக இந்த தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுக்க இந்த போராட்டத்தில் ஆதரவு பெருகியுள்ள நிலையில் வைகோ, கமல் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் இந்த மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சென்னையில் பல தரப்பினர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்டெர்லைட் ஆலையை மூட முடியாது என்று கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது:-
ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட முடியாது. ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்புகள் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து அதன்பின்னர் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.