புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 9 செப்டம்பர் 2020 (16:30 IST)

அரியர் தேர்வுகளை நடத்த அரசு திட்டமா? – அமைச்சர் விளக்கம்!

தமிழக பல்கலைகழகங்களில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தேர்வுகள் நடத்தப்படுமா என்பது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைகழகங்களில் அரியர் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில் தமிழக அரசின் முடிவை எதிர்த்து ஏஐடிஏஇ அண்ணா பல்கலைகழகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வெளியானது. அதேசமயம் அரசின் உத்தரவிற்கு எதிராக அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ள வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு இந்திய தொழில்நுட்ப குழுமத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், அதில் அரியர் தேர்வுகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள அமைச்சர் கேபி அன்பழகன் அரியர் தேர்வு தொடர்பாக அரசு எந்த கடிதத்தையும் இந்திய தொழில்நுட்ப குழுமத்திற்கு அனுப்பவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.