ஞாயிறு, 3 டிசம்பர் 2023
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 31 அக்டோபர் 2023 (15:54 IST)

4ஜி தொழில்நுட்பத்துடன் புதிய ஜியோ பட்டன் ஃபோன்! – JioPhone Prima 4G!

JioPhone Prima 4G
இந்தியாவில் பிரபலமான ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் 4ஜி தொழில்நுட்பத்துடன் புதிய பட்டன் ஃபோனை அறிமுகப்படுத்துகிறது.



என்னதான் நாடு முழுவதும் ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு அதிகரித்து விட்ட போதிலும் சாதாரண நடுத்தர மக்கள் பலர் பட்டன் ஃபோன்களை பயன்படுத்தவே ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களுக்காகவே குறைந்த விலையில் நோக்கியா, ஜியோ நிறுவனங்கள் பட்டன் ஃபோன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.

முன்னதாகவே ஜியோ இணைய வசதியுடன் கூடிய பட்டன் ஃபோன் மாடல்களை அறிமுகப்படுத்தியிருந்தது. தற்போது அதிவேக 4ஜி வேகத்தில் இயங்கும் புதிய JioPhone Prima 4G போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது ஜியோ நிறுவனம். இந்தியாவில் உள்ள 23 மொழிகளில் இந்த ஃபோனை பயன்படுத்தும் வகையில் மொழி மாற்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

JioPhone Prima 4G சிறப்பம்சங்கள்:

2.4 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே
ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ53 ப்ராசஸர்
1200க்கும் அதிகமான செயலிகளை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தும் வசதி
23 மொழிகளில் பயன்படுத்தும் மொழி மாற்ற வசதி
சிங்கிள் சிம் ஸ்லாட்
எஃப் எம் ரேடியோ, மெமரி கார்டு ஸ்லாட்
சென்சார் கேமரா, எல்இடி ப்ளாஷ் லைட்,
1800 mAh பேட்டரி

இந்த JioPhone Prima 4G போன் ப்ளூ மற்றும் யெல்லோ ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.2,599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K