திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 5 செப்டம்பர் 2020 (17:25 IST)

ஆயுத பூஜை நாளில் மாஸ்டர் பட அப்டேட் – செம்ம குஷியில் ரசிகர்கள்!

மாஸ்டர் படத்தின் டிரைலர் ஆயுத பூஜை அன்று வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை என்றாலும் இன்னும் ஒரு சில வாரங்களில் தமிழகத்தில் திரையரங்குகளில் திறக்க அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் திரையரங்குகளுக்கும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பார்வையாளர்கள் வருவார்களா? என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் காரணமாக தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ள படம் என்றால் அது மாஸ்டர்தான். கிட்டத்தட்ட ரிலீஸுக்கு இரு வாரங்களுக்கு முன்னால் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் அந்த படத்தை வாங்கியவர்கள் முதல் தயாரிப்பாளர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதைவிட அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் விஜய்யின் ரசிகர்கள்தான். எப்போது மாஸ்டர் ரிலீஸாகும் என காத்துக்கிடக்கும் அவர்களை நீண்ட நாட்களாகப் படக்குழு ஏமாற்றி வருகிறது. இந்நிலையில் இனிமேலும் அவர்களைக் காக்க வைக்கக் கூடாது என்பதற்காக ஆயுத பூஜை அன்று மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.