1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2020 (17:07 IST)

ஊரடங்கு நேரத்தில் ஆர்ப்பாட்டம்: ஒரு நாள் சம்பளத்தை பிடிக்க அரசு உத்தரவு

ஊரடங்கு நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கடந்த மாதம் ஏழாம் தேதி சத்துணவு ஊழியர்கள் சம்பளப் பிடித்தம் தொடர்பான சமூக நலத்துறை ஆணையரின் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அரசு உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தது. இதனால் ஒரு நாள் சம்பளம் பிடிக்க அரசு உத்தரவிட்டது
 
ஆனால் விடுமுறை நாளில் ஆர்ப்பாட்டம் நடத்தியது தவறு இல்லை என்று சத்துணவு ஊழியர் சங்கத்தினர் விளக்கம் அளித்தனர். ஆனால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அரசு உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியது குற்றம் என்று என்று கூறிய தமிழக அரசு சத்துணவு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.