1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 22 ஜூன் 2021 (14:07 IST)

மத்திய அரசின் இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும்: 9 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

மத்திய அரசின் துறைமுக வரைவு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என ஒன்பது மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் மத்திய அரசு துறைமுக வரைவு மசோதாவை அறிமுகம் செய்தது. இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என ஒன்பது கடலோர மாநிலங்களில் முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மாநிலங்களின் உரிமையை பறிக்கும் மத்திய அரசின் இந்த மசோதாவை அனைத்து முதலமைச்சர்களும் சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்றும் குறிப்பாக கடலோர மாநிலங்களின் முதலமைச்சர்கள் கடுமையாக எதிர்ப்புத் அளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்
 
இந்த கடிதத்தை அடுத்து இந்த மசோதாவுக்கு பல மாநிலங்களில் இருந்து எதிர்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் துறைமுக வரைவு மசோதா தனியாருக்கு பெரும் லாபத்தை கொடுக்கும் மசோதா என்றும் ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது