1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 21 ஜூன் 2021 (20:13 IST)

அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறுவோம்: திமுக எம்.எல்.ஏ கூட்டத்தில் முக ஸ்டாலின் பேச்சு!

அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் திமுக அமோக வெற்றி பெறும் என திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் பேசியுள்ளார் 
 
திமுக எம்எல்ஏ கூட்டம் இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்றும் இந்தக் கூட்டத்தில் அனைத்து எம்எல்ஏக்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் சற்றுமுன் இந்த கூட்டம் தொடங்கிய நிலையில் இந்த கூட்டத்தில் திமுக தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார். அதில் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறும் வகையில் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று அவர் பேசினார். 5 வருடங்கள் மக்களுக்காக சேவை செய்து மக்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு எடுத்தால் அடுத்த தேர்தலிலும் நாம்தான் வெற்றி என்றும் அவர் எம்எல்ஏக்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது