வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 6 ஜூன் 2018 (15:35 IST)

பிரதீபா குடும்பத்திற்கு ரூ.7 லட்சம்: முதல்வர் நிதியுதவி!

நாடு முழுவதும் 13 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதியுள்ளனர். அதில் தமிழகத்தில் 1.15 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வினை எழுதினர். நீட் தேர்வு முடிவுகளும் வெளியாகியது. 
 
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பெருவலூரைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி நீட் தேர்வு தோல்வியால் மனமுடைந்து எலி மருந்தை குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், பிரதீபா பரிதாபமாக உயிரிழந்தார். 
 
இந்த சமபவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே, அனிதா என்ற மாணவி நீட் தேர்வால் தற்கொலை செய்துக்கொண்டார். தமிழகத்தில் மட்டுமின்றி நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் டெல்லி மற்றும் ஐதராபாத்திலும் தற்கொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. 
 
இந்நிலையில், நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதீபா குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி வழங்கபப்டுவதாக அறிவித்துள்ளார். மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தால் தற்கொலை போன்ற முடிவுகளை எடுக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.