மாட்டு வண்டியில் சென்று ஆய்வு செய்த முதல்வர் பழனிசாமி!

மாட்டு வண்டியில் சென்று ஆய்வு செய்த முதல்வர் பழனிசாமி!
siva| Last Updated: வியாழன், 22 அக்டோபர் 2020 (15:34 IST)
மாட்டு வண்டியில் சென்று ஆய்வு செய்த முதல்வர் பழனிசாமி!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தன்னை எளிமையானவர் என்றும் விவசாயி என்றும் அவ்வப்போது கூறிக் கொள்வது மட்டுமன்றி அதனை விதத்திலும் நிரூபித்து வருகிறார் என்பது தெரிந்ததே

சொந்த ஊர் கிராம பகுதிக்கு சென்று கொண்டிருக்கும் போது திடீரென காரை நிறுத்திவிட்டு வயலில் வேலை செய்பவர்களுடன் சர்வ சாதாரணமாக முதல்வர் பேசிக் கொண்டிருப்பார். ஒரு முதல்வர் என்ற பந்தா இல்லாமல் அவர் விவசாயிகளுடன் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது புதுக்கோட்டையில் கவிநாடு கண்மாயில் முடிவுற்ற குடி மராமத்து பணிகளை ஆய்வு செய்ய முதல் அமைச்சர் சென்றார். அப்போது அவர் மாட்டு வண்டியில் செய்து ஆய்வு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்வர் மட்டுமன்றி அமைச்சர்களும் அவருடன் மாட்டு வண்டிகள் சென்றனர்

தற்போது கவுன்சிலர்கள் கூட கோடிக்கணக்கான மதிப்புள்ள காரில் சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒரு மாநிலத்தின் முதல்வர் மாட்டுவண்டியில் சென்று ஆய்வு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது


இதில் மேலும் படிக்கவும் :