திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 21 மே 2019 (10:26 IST)

முதல்வர் பழனிச்சாமியுடன் தோப்பு வெங்கடாசலம் சந்திப்பு! சமாதானப்படலமா?

அம்மா பேரவை மாநில இணைச் செயலாளரும் பெருந்துறை சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏவுமான தோப்பு வெங்கடாசலம் நேற்று தனது பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதாகவும், இதுகுறித்த ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் அளித்துவிட்டதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து அவர் விரைவில் அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் இணைவார் என்றும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் சேலத்தில் இன்று முதல்வர் பழனிசாமியுடன் பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது முதல்வரிடம் தோப்பு வெங்கடாசலம் சில விஷயங்களை மனம்விட்டு பேசியதாகவும், அதற்கு முதல்வர் அவரை சமாதானப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
நடைபெற்று முடிந்துள்ள 22 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் குறைந்தது ஐந்து தொகுதிகளிலாவது அதிமுக வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைத்து கொள்ள முடியும் என்ற நிலையில் அதிமுகவின் ஒவ்வொரு எம்.எல்.ஏவும் ஆட்சி தொடர முக்கியம் என்பதால் தோப்பு வெங்கடாசலத்தை முதல்வர் பழனிச்சாமி சமாதானப்படுத்தியதாக தெரிகிறது