வியாழன், 22 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (23:20 IST)

நான் வீட்டுக்கு செல்வேன், தினகரன் மாமியார் வீட்டுக்கு செல்வார்: எடப்பாடியார் ஆவேச பேச்சு

நான் வீட்டுக்கு செல்வேன், தினகரன் மாமியார் வீட்டுக்கு செல்வார்: எடப்பாடியார் ஆவேச பேச்சு
சென்னையில் நடைபெற்ற அறிஞர் அண்ணாவின் 109ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தினகரன், மு.க.ஸ்டாலின் ஆகியோர்கள் மீது கடுமையான விமர்சனம் வைத்தார்.



 
 
ஒரு வாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரகளை வீட்டுக்கு போக வைப்பேன் என தினகரன் இன்று மாலை கூறிய நிலையில் இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர், ஒருவாரம் கழித்து நான் வீட்டுக்குத்தான் போவேன், ஆனால் தினகரன் மாமியார் வீட்டுக்கு செல்வார் என்று கூறினார்.
 
ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்டு பத்து ஆண்டுகாலம் வனவாசம் சென்றவர் தினகரன், கட்சிக்காகவோ, மக்களுக்காகவோ ஒருமுறை கூட போராட்டம் நடத்தி சிறை செல்லாதவர் தினகரன், அவர் எதற்காக சிறை சென்றார் என்பது அனைவருக்கும் தெரியும்' என்று ஆவேசமாக பேசினார்/
 
மேலும் திமுக குறித்தும், மு.க.ஸ்டாலின் குறித்தும் முதல்வர் ஆவேசமாக பேசினார்.