நிவர் புயல் எதிரொலி; நாளையும் பொதுவிடுமுறை அறிவிப்பு! – எந்தெந்த மாவட்டங்களில்?

edapadi palanisamy
Prasanth Karthick| Last Modified புதன், 25 நவம்பர் 2020 (13:44 IST)
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்க உள்ளதால் புயல் அபாய மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக உருமாறியுள்ளது. தீவிர புயலாக உள்ள நிவர் கரையை கடக்கும் முன்னர் அதி தீவிர புயலாக மாறும் என கூறப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு தொடங்கி விடியும் வரை புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் புயல் கரையை கடக்கும் நிலையில் பல மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்பதால் நாளையும் 13 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி, சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :